நியூயார்க் நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தில் மூண்ட தீயில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாகவும் நால்வர் படுகாயம் அடைந்ததாகவும் அதி காரிகள் கூறினர். கடந்த 25 ஆண்டுகளில் இது மோசமான தீ விபத்து என்று நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ கூறினார். தீ விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்ததாகவும் அவர் கூறி னார். அக்கட்டடத்தில் தீப் பற்றியதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தகவல் அறிந்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற 170க்கும் மேற்பட்ட தீயணைப் பாளர்கள் தீயைக் கட்டுப்படுத்த சில மணி நேரம் போராடியதாக அதிகாரிகள் கூறினர். நியூயார்க்கில் பிரபல சுற்றுலா பகுதியான பிராங்க்ஸ் பூங்கா விற்கு அருகே உள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தின் முதல் மாடி யில் வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 7 மணியளவில் தீ மூண்டதாகக் கூறப்பட்டது.
நியூயார்க் கட்டடத்தில் மூண்ட தீயை அணைத்த பின்னர் அங்கிருந்து செல்லும் தீயணைப்பாளர்கள். சுமார் 170 தீயணைப்பாளர்கள் தீயை அணைப்பதில் ஈடுபட்டிருந்தனர். படம்: ஏஎஃப்பி

