ஐநா தடையை மீறி வடகொரியாவுக்கு எண்ணெய் விநியோகம்

ஐநா தடையை மீறி வடகொரியாவுக்கு எண்ணெய் விநியோகம்

1 mins read

அனைத்துலகக் கடற்பகுதியில் வடகொரிய கப்பலுக்கு ரகசியமாக எண்ணெய் மாற்றிய சந்தேகத்தின் பேரில் ஹாங்காங் கொடியுடன் கூடிய கப்பல் ஒன்றை தென் கொரிய அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். எந்தவொரு கப்பலிலி ருந்தும் வடகொரிய கப்பலுக்கு சரக்கு பரிமாற்றம் செய்யக்கூடாது ஐநா பாதுகாப்பு மன்றம் தடை விதித்திருக்கும் நிலையில் இக் கப்பல் பிடிபட்டுள்ளது என தென் கொரிய அதிகாரிகள் நேற்று கூறியதாக 'யோன்ஹாப்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லைட்ஹவுஸ் வின்மோர் என் னும் பெயர்கொண்ட அந்த ஹாங் காங் கப்பல் கடந்த 19ஆம் தேதி வடகொரிய கப்பலுக்கு 600 டன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை மாற்றிய பிறகு தென்கொரியாவின் இயோசு துறைமுகத்துக்குள் நுழைந்தபோது கடந்த 24ஆம் தேதி அக்கப்பல் பிடிபட்டது. அதனைத் தொடர்ந்து தென் கொரிய சுங்கத் துறை அதிகாரி கள் அக்கப்பலை முழுமையாகச் சோதனை செய்தனர். பாதுகாப்பு மன்ற உறுப்பு நாடு கள் வடகொரியாவுக்கு எந்த வொரு பொருளையும் கப்பல் மூலம் மாற்றிவிடுவதை செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர் மானம் தடை விதிக்கிறது.

பிடிபட்டுள்ள ஹாங்காங் கொடி தாங்கிய கப்பல் தைவான் நிறுவனத்தால் இயக்கப்பட்டது என்றும் இதற்கு முன்னர் அக் டோபர் 11ஆம் தேதி தென்கொரிய துறைமுகத்துக்கு அக்கப்பல் வந்தது என்றும் அதிகாரிகள் கூறினர். ஜப்பானின் சுத்திகரிக் கப்பட்ட எண்ணெய்யை ஏற்றிய பின்னர் தைவானுக்குச் செல்வ தாகக் கூறி அக்கப்பல் புறப்பட்ட தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.