கென்யாவில் பேருந்து - லாரி மோதல்: 30 பேர் பலி

கென்யாவில் பேருந்து - லாரி மோதல்: 30 பேர் பலி

1 mins read

நைரோபி: கென்யாவின் மத்திய பகுதியில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட சாலை விபத்தில் 30 மாண்டனர். நேற்று அதிகாலை 3.00 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அந்நாட்டுப் போக்கு வரத்து போலிஸ் தலைவர் ஜிரோ அரோம் தெரிவித்தார். நகுரு -எல்டோரெட் விரைவுச் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. மேற்கு கென்யாவில் உள்ள புசியா என்னும் இடத்தில் இருந்து நகுரு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும் நகுரு நகரில் இருந்து புசியா நகரை நோக்கிச் சென்ற கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. கென்யாவில் கடந்த மாதத்தில் மட்டும் சாலை விபத்தில் மாண்டோரின் எண் ணிக்கை 100ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து போலிஸ் தலைவர் ஜிரோ தெரிவித்துள்ளார். விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் மாண்டனர்.