பேங்காக்: தாய்லாந்தின் பேங்காக்கில் பிரமிட் என்னும் திட்டத்தின் மூலம் 2,600க்கு மேற்பட்டோரை ஏமாற்றி அவர்களுக்கு 5.3 பில்லியன் பாட் பணமிழப்பு ஏற்படுத்தியதற்காக தாய்லாந்து நீதிமன்றம் அவருக்கு 6,637 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. புடிஸ் கிட்டித்தாராடிலொக் என்ற அந்த ஆடவர் 'த சிஸ்டம் ப்ளக் & ப்ளே கம்பெனி' மற்றும் இன்னோவேஷன் ஹோல்- டிங் கம்பெனி' ஆகிய நிறுவனங்களின் இயக்குநராக செயல்பட்டு வந்தார். அந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதற்குப் பயிற்சி அளித்து ஏராளமானோரிடம் நிதி வசூல் செய்தார். அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அந்த நிதியை சட்ட விரோதமாகக் கடன் கொடுத்தார். புடிஸ் மீது 2,263 குற்றங்கள் சுமத்தப்பட்டன.
நிதி மோசடியில் ஈடுபட்டவருக்கு 6,637 ஆண்டுகள் சிறை
1 mins read

