கோலாலம்பூரில் உள்ள நகைக் கடை ஒன்றில் மின்னல் வேகத்தில் 1.5 மில்லியன் ரிங்கிட் (S$493,080) மதிப்புள்ள நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு 8.30 மணி யளவில் பத்துப் பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துவிட்டு ஓடியதாக செராஸ் மாவட்ட துணை தலைமை போலிஸ் அதி காரி இஸ்மாடி போர்ஹான் தெரி வித்தார். சந்தேக நபர்கள் அனைவரும் தலைக்கவசத்தால் முகத்தை மறைத்தவாறும் கையுறை அணிந் தும் காணப்பட்டதாகவும் அவர் களில் சிலர் கையில் சுத்தியலுடன் கடைக்குள் நுழைந்தபோது பாது காவலர் உள்ளிட்ட ஐந்து ஊழி யர்கள் அங்கு இருந்ததாகவும் அவர் கூறினார். "தாமான் செகரில் உள்ள கடைத்தொகுதிக்குள் ஐந்து ஆட வர்கள் நுழைந்து அங்கிருந்த கண்ணாடிப் பெட்டிகளை அடித்து நொறுக்கினர். இதர ஐவர் கடைத்தொகுதியின் வெளியில் மோட்டார் சைக்கிள் களில் காத்திருந்தனர். இந்த விவ ரங்கள் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
"சந்தேக நபர்கள் அனைவரும் 20களின் வயதுடையவர்கள். நகை களைக் கொள்ளையடித்துவிட்டு மூன்று நிமிடங்களில் அவர்கள் அனைவரும் தப்பிச் சென்றுவிட் டனர் "கொள்ளைச் சம்பவத்தோடு தொடர்புடைய ஆதாரங்களைத் திரட்டிய தடயவியல் குழு சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப் படும் சிகரெட்டு துண்டுகளைக் கண்டெடுத்து உள்ளனர். கடைத்தொகுதியின் கண் காணிப்புப் படக்கருவிகளில் பதி வான காட்சிகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்," என் றார் அந்த அதிகாரி. சந்தேக நபர்களை போலிசார் தீவிரமாகத் தேடிவருவதாகவும் அவர் சொன்னார்.
கடையில் அடித்து நொறுக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டிகள். படம்: மலேசிய ஊடகம்