அமெரிக்காவுக்கு மிரட்டல், தென்கொரியாவுக்கு நேசக்கரம்: வடகொரியாவின் புதிய போக்கு

1 mins read

அமெரிக்கா முழுவதும் வடகொரி யாவின் தாக்குதல் வரம்பிற்குள்தான் உள்ளது என்றும் 'அணுவாயுத ஏவு கணைக்கான பொத்தான்' தமது மேசையில் இருப்பதாகவும் மிரட்டல் விடுக்கும் விதமாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித் துள்ளார். தொலைக்காட்சியில் புத்தாண்டு உரை நிகழ்த்திய அவர், தென் கொரியாவுடன் சமரசம் செய்துகொள் வதற்கான பேச்சுவார்த் தைக்குத் தயார் என்றவொரு தகவலையும் வெளியிட்டார். வடகொரியாவின் அணுவாயுதத் திட்டங்களால் பதற்றம் மிகுந்ததாகக் கடந்த ஆண்டு விளங்கியது.

இருப் பினும் புதிய ஆண்டில் கொரிய தீபகற்பத்தில் ராணுவப் பதற்றத்தைக் குறைத்து தென்கொரியாவுடனான உறவை மேம்படுத்தும் தமது விருப் பத்தை கிம் தமது உரையில் வெளிப்படுத்தினார். "கொரிய தீபகற்பத்தில் அமைதி யான சூழலை ஏற்படுத்த இரு கொரியாக்களும் முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்," என்றார் அவர். அத்துடன், அடுத்த மாதம் தென்கொரியாவில் நடைபெற இருக் கும் குளிர்கால ஒலிம்பிக் விளை யாட்டுகளில் பங்கேற்க தமது குழுவை அனுப்புவது பற்றி பரி சீலித்து வருவதாகவும் வடகொரியத் தலைவர் கூறினார்.