அடுத்த மாதம் 9-25 தேதிகளில் தென்கொரியாவின் பியோங்சங் நகரில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரிய விளையாட்டா ளர்கள் பங்கேற்பது தொடர்பில் அந்நாட் டுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா அழைப்பு விடுத்து உள்ளது. எல்லைப் பகுதியில் அமைந்துள்ள 'சண்டை நிறுத்த கிராமம்' என அழைக் கப்படும் பான்முன்ஜோம் கிராமத்தில் இம்மாதம் 9ஆம் தேதி இருநாட்டுப் பேராளர்களும் சந்தித்துப் பேசலாம் என்று தென்கொரிய நல்லிணக்க அமைச்சர் சோ மியூங் கியான் தெரிவித்துள்ளார்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வடகொரிய விளையாட்டாளர் களை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன் தமது புத்தாண்டு உரையில் கூறியிருந்தார். அத்துடன், கொரிய தீபகற்பத்தில் அமைதியை மலரச் செய்ய இரு நாடுகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், அவரது சமரச முயற் சியை வரவேற்கும்விதமாக வடகொரியா உடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தென்கொரியாவும் அறிவித்துள்ளது.

