தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சான் பிரான்சிஸ்கோவில் ஒரு வாகனம் கூட்டத்தினர் மீது மோதியது

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு வாகனம், அந்த வழியாக சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீதும் ஒரு கார் மீதும் மோதியதில் ஏழு பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்தச் சம்பவம் பயங்கரவாதம் தொடர்புடையது அல்ல என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் கூறின. கடந்த நவம்பர் மாதம் நியூயார்க்கில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஒரு குடியேறி, கூட்டத்தினர் மீது ஒரு வாகனத்தை மோதியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். அது தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புத்தாண்டு சமயத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்க அமெரிக்காவில் பல நகரங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருந்தது.