ஜோகூர், பாகாங், திரங்கானுவில் வெள்ளப்பெருக்கு; வீடுகளைவிட்டு வெளியேறிய 1,000 பேர்

ஜோகூர், பாகாங், திரங்கானுவில் வெள்ளப்பெருக்கு; வீடுகளைவிட்டு வெளியேறிய 1,000 பேர்

1 mins read

ஜோகூர்பாரு: மலேசியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜோகூர், பாகாங், திரங்கானு ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 1,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டதாக அதிகாரிகள் கூறினர். ஜோகூரில் கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 371 பேர் வெளியேற்றப்பட்டதாக வும் நேற்று மட்டும் 95 குடும் பங்கள் வெளியேற்றப்பட்டதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மோசமாக பாதிக்கப்பட்ட மெர்சிங் வட்டாரத்தில் மக்கள் தங்குவதற்கு தற்காலிக முகாம்கள் அமைக் கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார். வெள்ளப்பெருக்கு காரணமாக ஜோகூரில் பல சாலைகள் பழுதடைந்துள்ளதாகக் கூறப்படு கிறது. இதற்கிடையே வெள்ளப் பெருக்கு காரணமாக பாகாங்கில் கிட்டத்தட்ட 11 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் பல மாணவர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.