ஈரானில் பதற்றம்: போலிஸ்காரர் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரரால் சுட்டுக்கொலை

1 mins read
13f46596-161e-4916-86a2-fecb6bc225fb
-

டெஹ்ரான்: ஈரானில் ஐந்து நாட்களுக்கு மேலாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக் கும் வேளையில் போலிஸ்காரர் ஒருவரை ஆர்ப்பாட்டக்காரர் சுட்டுக்கொன்றதாக ஈரானிய போலிசார் தெரிவித்துள்ளனர். ஈரானில் நீடிக்கும் போராட் டங்களில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டதாக ஊடகத் தகவல் கூறுகிறது.. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் பல இடங்களில் நடந்த போராட்டங்களில் 10 பேர் கொல் லப்பட்டனர். ஈரான் நாட்டு மக்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டும் ஊழலுக்கு எதிராக போராடியும் வருகின்றனர். அரசுக்கு எதிராக நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதை யடுத்து அனைத்துப் பகுதிகளிலும் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெஹ்ரானில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி வீதிகளில் வலம் வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் பல கார்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் மோதல் அதிகரித்து வருவதால் பல வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்துவதாகக் கூறப் படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்