வாஷிங்டன்: பாகிஸ்தானில் பயங் கரவாதத்தை ஒழிப்பதற்காக அந் நாட்டுக்கு அமெரிக்கா இதுவரை பல பில்லியன் டாலர் நிதி உதவி அளித்திருந்தும் பாகிஸ்தான் அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குறை கூறியுள் ளார். நிதியைப் பெற்றுக்கொண்டு அமெரிக்காவை பாகிஸ்தான் ஏமாற்றி விட்டதாகவும் திரு டிரம்ப் குற்றம் சாட்டினார்.
கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக சுமார் 33 பில்லியன் டாலர் நிதி உதவி அளித்திருப்பதாகவும் அதற்கு கைமாறாக பொய் மற்றும் ஏமாற்று இதைத் தவிர பாகிஸ்தான் வேறு எதுவும் செய்யவில்லை என்றும் திரு டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பயங்கரவாதிகளுக்கு பாது காப்பான புகலிடமாக பாகிஸ்தான் எப்போதும் விளங்கி வருவதாகவும் திரு டிரம்ப் குற்றம் சாட்டினார். இதனால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்க இருந்த 250 மில்லியன் டாலர் நிதி உதவியை நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடைக்காது என்று திரு டிரம்ப் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

