பள்ளத்தில் பேருந்து விழுந்ததில் 46 பேர் மரணம்

பள்ளத்தில் பேருந்து விழுந்ததில் 46 பேர் மரணம்

1 mins read
d10680bf-840e-4743-8e34-94d684f54352
-

லிமா: பெரு தலைநகர் லிமாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்து பசமாயோ கடற் கரை நகருக்கு அருகே நெடுஞ் சாலையில் ஆபத்தான வளைவில் எதிரே வந்த லாரி மீது மோதியதைத் தொடர்ந்து அந்தப் பேருந்து 100 மீட்டர் ஆழமான ஒரு பள்ளத்தில் விழுந் தது. செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த அந்த விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்ததாக போலிசார் கூறினர். அந்தப் பேருந்தில் மொத்தம் 57 பேர் சென்றதாகக் கூறப்பட்டது. பள்ளத்தில் இருந்து பயணிகளை மீட்பது கடினமாக இருந்ததால் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் தொடர்வதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர் களில் சிலரின் நிலைமை மோச மாக உள்ளது என்று மருத்துவ மனை அதிகாரிகள் கூறினர்.

பெருவில் கடற்கரை நகருக்கு அருகே ஒரு பேருந்து 100 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்தது. அந்த இடத்திற்கு தீயணைப்பாளர்களும் போலிசாரும் விரைந்து சென்றுள்ளனர். படம்: ஏஎஃப்பி