ஹனோய்: வியட்னாம் தலைநகர் ஹனோயில் நேற்று குண்டு வெடித்ததில் ஒரு வயதுக் குழந்தையும் ஐந்து வயது சிறுமியும் உயிரிழந்ததாக போலிசார் கூறி னர். அந்த குண்டு வெடிப்பில் மேலும் 6 பேர் காயம் அடைந்த தாகவும் பல வீடுகள் நாசமானதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். அந்த வெடிப்புக்கான காரணத்தை அறிய அதிகாரிகள் புலன்விசாரணை செய்து வரு கின்றனர்.
பாக் நின் மாநிலத்தின் யென் போங் வட்டாரத்தில் நேற்று காலை 4.30 மணியளவில் ஏற்பட்ட வெடிப்பில் அப்பகுதியில் இருந்த பல வீடுகள் முற்றாக நாசமான தாகக் கூறப்பட்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணுக்குப் பொருட்களை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ள பல குடும்பங்கள் வசிக்கும் பகுதி அது என்று அதிகாரி ஒருவர் கூறினார். வியட்னாம் போரின் போது அமெரிக்க விமானங்கள் வீசிய பல வெடிகுண்டுகள் இன்னும் மண்ணில் புதைந் துள்ளதாகவும் அவ்வப்போது இந்த குண்டுகள் வெடிப்பதால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது என்றும் அந்த அதிகாரி கூறினார். கடந்த ஆகஸ்ட் மாதம் கான் ஹோ மாநிலத்தில் போர்க்கால குண்டு ஒன்று வெடித்ததில் மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
வியட்னாம் தலைநகர் ஹனோயில் குண்டு வெடித்ததில் அப்பகுதியில் இருந்த பல வீடுகள் நாசமாகின. குண்டு வெடிப்பில் ஒரு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். குண்டு வெடித்த இடத்தில் போலிசாரும் மீட்புக் குழுவினரும் கூடியுள்ளனர். படம்: ஏஎஃப்பி

