அடையாளம் காணப்பட்ட முக்கிய சந்தேகப் பேர்வழி

அடையாளம் காணப்பட்ட முக்கிய சந்தேகப் பேர்வழி

1 mins read

ஜோகூர்பாரு: ஜோகூர் பாருவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி 44 வயது ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியென சந்தே கிக்கப்படும் ஒருவரை மலேசியப் போலிசார் அடையாளம் கண்டுள்ள தாக தி ஸ்டார் தகவல் கூறியது. கடந்த மாதம் கொலை செய்யப்பட்டவர் போதைப்பொருள் கும்பல் ஒன்றின் உறுப்பினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் அந்த பெட்ரோல் நிலையத்தில் அவரது கார் டயரை மா ற் றி க் கொ ண் டி ரு ந் த போ து அங்கு வந்த நான்கு பேர் அவரைக் கத்தியால் தாக்கியும் பின்னர் அவர் மீது காரை ஏற்றியும் கொலை செய்ததாக போலிஸ் தகவல்கள் கூறின. அக்கொலை நடந்தபோது அந்த சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்பபடும் கத்தி ஒன்றை கோத்தா திங்கியில் உள்ள டெசாருக்குச் செல்லும் ஒரு சாலையில் போலிசார் கண்டெடுத்ததைத் தொடர்ந்து அக்கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய சந்தேகப் பேர்வழி அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலிஸ் படைத் தலைவர் முகமது கலீல் காதர் கூறினார்.