வடகொரியா மேலும் ஒரு 'கண் டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை' சோதனைக்குத் தயா ராகும் தகவல் பரவி வருவதாக சிபிஎஸ் என்னும் அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித் துள்ளது. கடந்த நவம்பர் மாதம் வட கொரியாவின் மூன்றாவது ஏவு கணைச் சோதனை நடத்தப்பட்ட அதே பகுதியில் அந்தப் புதிய ஏவுகணைச் சோதனையை நடத் துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அது குறிப்பிட்டது. இவ்வாண்டுக்கான முதல் ஏவு கணையை வடகொரியா விரை வில் ஏவுவதற்கான சாத்தியம் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற ராணுவ அதிகாரிகளின் தக வலை மேற்கோள் காட்டி 'எம்பிசி நியூஸ்' தெரிவித்துள்ளது. இந் நிலையில், தென்கொரியாவுட னான நேரடி தொலைபேசி மீண் டும் இயக்கப்படும் என வட கொரியா அறிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவின் அணுவாயுதப் பொத்தான் வட கொரியாவிடம் உள்ளதைக் காட் டிலும் பெரியது என்றும் அதிக சக்தி வாய்ந்தது என்றும் அமெ ரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அணுவாயுதத்தை ஏவும் பொத் தான் தமது மேசையில் எப்போதும் இருப்பதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தமது புத் தாண்டுச் செய்தியில் விடுத்த மிரட்டலுக்கு திரு டிரம்ப் தமது டுவிட்டரில் இவ்வாறு பதில் மிரட்டல் விடுத்துள்ளார்.

