ஹனோய்: டீ பாக்கெட்டுகளுக் குள் மறைத்து வைக்கப்பட்டு லாவோஸிலிருந்து கடத்தி வரப் பட்ட $4 மில்லியன் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருட் களை வியட்னாம் போலிசார் பிடித்துள்ளனர். கம்யூனிஸ்ட் நாடான வியட்னாமில் பிடிக்கப் பட்ட ஆகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் சம்பவமாக இது வகைசெய்யப்பட்டுள்ளது. லாவோஸ், தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளின் சில பகுதிகளை ஒட்டியுள்ள வியட்னாம், 'தங்க முக்கோண' போதைப் பொருள் வணிக மையமாக வர்ணிக்கப்படும் இந்த வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
போதைப் பொருட்களின் சில வகைகள் விளையும் உலகின் இரண்டாவது பெரிய வட்டாரமாக இந்தப் பகுதி விளங்குகிறது. 44 வயது ஆடவரும் 30களில் உள்ள பெண்ணும் 170 கிலோகிராம் எடையுள்ள ஹெராயின் போதைப் பொருட் களைத் தங்களின் மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்தபோது சிக்கினர். லாவோஸிலிருந்து கடத்தி வரப்பட்ட அந்தப் போதைப் பொருட்கள் பெயர் குறிப்பிடப் படாத இன்னொரு நாட்டுக்குக் கொண்டுச் செல்லப்படவிருந் தன. போதைப் பொருளுக்கு எதிரான சட்டம் வியட்னாமில் கடுமையாக உள்ள நிலையிலும் இத்தகைய கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.
'மியன்மார் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்' யங்கூன்: ராணுவத்தின் ஆதிக்கத் தில் உருவாக்கப்பட்டுள்ள மியன் மாரின் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அந் நாட்டின் ராணுவத்தைச் சாராத அதிபர் டின் கியாவ் தனது சுதந் திர தின உரையில் நேற்று கூறி உள்ளார். தேசிய திட்டத்தின் கீழ் அங்கீ கரிக்கப்பட்ட சிறுபான்மையினர் அனைவருக்கும் ஒரே நீதி இருக்க வேண்டும் என்றும் அவர் கூறி னார். இருப்பினும், ரோஹிங்யா முஸ்லிம்களைப் பற்றிய எந்த வித தகவலையும் அவர் தெரிவிக்க வில்லை. சுமார் அரை நூற்றாண்டு ராணுவ ஆட்சியில் இருந்த மியன் மாரில் அரசியலமைப்புச் சட்டத்தில் ராணுவத்திற்கு உள்ள பெரும் ஆதிக்கத்தைக் குறைப்பது சிக்க லான ஒன்றாக இருந்து வந்துள் ளது. இந்தச் சட்ட சீர்திருத்தம் குறித்து அரசாங்கத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு ஆலோசனை வழங்கி வந்த வழக்கறிஞர் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் கொல்லப் பட்டதையடுத்து இது குறித்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.

