நியூயார்க்: அமெரிக்காவின் பல பகுதிகள் கடும் பனிப்பொழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கொட்டும் பனியால் சாலைகள், மரங்கள், வீடுகள் என அனைத்தும் வெண்பட்டுப் போர்த்தியது போன்று காட்சியளிக்கின்றன. கடும் குளிர் காரணமாக அங்குள்ள ஏரிகள் உறைந்து காணப்படுகிறது. பனிப்பொழிவு அதிகமாகக் காணப்பட்டதால் பல இடங்களில் கடந்த இரு நாட்களாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். குறிப்பாக வடகிழக்கு கடலோரப் பகுதி மக்கள் கடும் பனிப்பொழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகமான பனி கொட்டுவதால் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் இதனால் பல வீடுகள் இருளில் மூழ்கியதாகவும் கூறப்பட்டது. சில இடங்களில் பனிப்புயல் மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாகவும் அதிகாரிகள் கூறினர். கொட்டிக்கிடக்கும் பனியை அகற்ற குடியிருப்பாளர்களும் தொண்டர்களும் சிரமப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவின் பல பகுதிகளில் பல வாகனங்களைப் பனி மூடியுள்ளது. படம்: ஏஎஃப்பி

