பினாங்கில் மீண்டும் வெள்ளம்: மக்கள் பாதிப்பு

பினாங்கில் மீண்டும் வெள்ளம்: மக்கள் பாதிப்பு

1 mins read
a34ba700-61ce-4911-a905-a50c9b09ac5b
-

ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநில மக்கள் மீண்டும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஹோங் செங் எஸ்டேட் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள சுமார் 20 வீடுகள் வெள்ள நீரில் மிதப்பதாகக் கூறப்படுகிறது. மீண்டும் வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்து விட்டதாகவும் கழுத்து அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்திருப்பதாகவும் இதனால் தனது வயதான பெற்றோருடன் அங்கிருந்து மிகவும் சிரமப்பட்டு வெளியேறியதாக தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். இதுபோன்ற வெள்ளப் பெருக்கை தன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்று அந்த மாது கூறினார்.

கடந்த அக்டோபர் மாதத்தி லிருந்து மூன்றாவது முறையாக பினாங்கில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசிய தற்காப்பு அமைச்சர் ஹிசாமுதின் ஹுசேனும் ராணுவ வீரர்களும் நிவாரண உதவிப்பொருட்களை வழங்குகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்