மலேசிய எதிர்த்தரப்பு பிரதமர் வேட்பாளர் மகாதீர்

மலேசிய எதிர்த்தரப்பு பிரதமர் வேட்பாளர் மகாதீர்

1 mins read

இவ்வாண்டில் நடைபெறவிருக்கும் மலேசிய நாடாளுமன்றத் தேர் தலுக்கான எதிர்த்தரப்பு பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதீர் முகமது அறிவிக்கப்பட்டுள்ளார். பக்காத்தான் ஹரப்பான் எதிர்க் கட்சிக் கூட்டணி நேற்று இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. துணைப் பிரதமர் வாய்ப்பை பிகேஆர் தலைவர் வான் அஸிஸா வானுக்கு அக்கூட்டணி வழங்கி உள்ளது. இதற்கான உடன்பாட்டில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நான்கு கட்சிகளும் கையெழுத் திட்டுள்ளன.

இருப்பினும் தேர்தலில் எதிர்த் தரப்பு வாகை சூடினால் டாக்டர் மகாதீர், 92, இடைக்கால பிரதம ராகவே இருப்பார் என்றும் சிறை யிலிருக்கும் அன்வார் இப்ராகிம் விடுதலையாகி அரச மன்னிப்பு பெற்ற பின்னர் நாட்டின் அடுத்த பிரதமராக அவருக்கு மகாதீர் வழி விட வேண்டும் என்றும் நேற்று நடந்த எதிர்த்தரப்பு கூட்டணியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. சிறைவாசம் அனுபவிப்பவ ருக்கு ஐந்தாண்டு அரசியல் தடை என்பது அரச மன்னிப்பால் விலகும் என பிகேஆர் நம்புகிறது. டாக்டர் மகாதீர் மலேசியாவின் நான்காவது பிரதமராக 22 ஆண்டு காலம் பதவியில் இருந்தவர் என் பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் வேட்பாளராக தமது பெயர் அறிவிக்கப்பட்டதும் டாக் டர் மகாதீர் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்.