வாஷிங்டன்: நிலவில் கால் பதித்த அமெரிக்க விண்வெளியாளர் ஜான் யங் (படம்) நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 87. நிமோனியா காரணமாக அவர் உயிர் பிரிந்தது. நிலவில் நடந்த 12 பேரில் இவரும் ஒருவர். அதுமட்டுமல்லாது, நிலவில் கால் வைத்தவர்களில் விண்வெளிக் களம் ஓட்டிய ஒரே விண்வெளியாளர் எனும் பெருமை யங்கைச் சேரும். அமெரிக்காவின் விண்வெளித் திட்டத்தில் மற்றவர்களைவிட இவர்தான் ஆக நீண்டகாலத்துக்குச் சேவையாற்றி யவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1972ல் இவர் நிலவில் கால் பதித்து நான்கு சக்கர ரோவர் ஒன்றை ஓட்டினார்.
நிலவில் கால் பதித்த ஜான் யங் மரணம்
1 mins read
-

