டிரம்ப்: கிம் ஜோங் உன்னுடன் பேசத் தயார்

டிரம்ப்: கிம் ஜோங் உன்னுடன் பேசத் தயார்

1 mins read

மேரிலேண்ட்: வடகொரியாவுடனும் தென்கொரியாவுடனும் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரி வித்துள்ளார். அதுமட்டுமல்லாது, சில நிபந்த னைகள் நிறைவேற்றப்பட்டால் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் நேரடியாகப் பேசத் தாம் தயாராக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

"தற்போது வடகொரியாவும் தென்கொரியாவும் ஒலிம்பிக் போட்டி பற்றி கலந்துரையாடுகின்றன. இது ஒரு நல்ல துவக்கம்," என்று கேம்ப் டேவிட்டில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது அவர் தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒலிம்பிக் போட்டி யையும் தாண்டி மற்ற விவகாரங் களுக்கும் தீர்வு காணப்பட்டால் மனிதநேயத்துக்கு அது நல்ல ஒரு செய்தியாக அமையும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வடகொரியாவுக்குத் தாம் நெருக்குதல் கொடுத்து வந்ததால் அது தென்கொரியாவுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். தமது புத்தாண்டு உரையின்போது தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் முன்வருவதாக கிம் ஜோன் உன் கூறியதை அடுத்து, அவரது இந்த அழைப்பை தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஏற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு வடகொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கை விட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.