யூத அமைப்புகளிடம் நிலம் விற்க ஜெருசலத்தின் கிரேக்கத் தேவாலயம் முடிவு

யூத அமைப்புகளிடம் நிலம் விற்க ஜெருசலத்தின் கிரேக்கத் தேவாலயம் முடிவு

1 mins read
0f189285-9041-4435-aebd-f41359d0a826
-

பெத்லஹேம்: ஜெருசலத்தில் உள்ள கிரேக்கத் தேவாலயம் அதற்குச் சொந்தமான நிலங்களை யூத அமைப்புகளிடம் விற்க முடிவு எடுத்ததைத் தொடர்ந்து பாலஸ் தீனர்கள் கொந்தளித்துள்ளனர். இந்நிலையில், தேவாலயத்தின் தலைமைப் பேராயர் நேற்று மேற்குக் கரைக்குச் சென்றார். அவர் பயணம் செய்த காருடன் இரண்டு கார்களும் உடன் வந்தன. இந்த மூன்று கார்களையும் பாலஸ்தீனர்கள் சுற்றி வளைத்தனர்.

கார்கள் மீது கற்களும் தண்ணீர் போத்தல்களும் வீசப் பட்டன. தங்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக முழக்க மிட்டவாறு கார்களை அடித்து நொறுக்கினர். தலைமைப் பேராய ரைப் பாதுகாக்க விரைந்த பாலஸ் தீனப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர் களைக் கலைத்தனர். தலைமைப் பேராயரின் காரை தவிர மற்ற இரண்டு கார்களின் கண்ணாடிகள் தாக்குதல் காரணமாக உடைந்திருந்தன. தலைமைப் பேராயரைத் தேவாலயத்தில் இருக்கவிடப் போவதில்லை என்று ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனர்களை மடக்கிப் பிடிக்கும் அதிகாரிகள். படம்: ஏஎஃப்பி