தீப்பிடித்த கப்பல்; பலரைக் காணவில்லை

1 mins read
267106e8-6beb-4932-9418-54c97dce504e
-

பெய்ஜிங்: சீனக் கடற்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சரக்குக் கப்பல் மீது எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று மோதியது. இதில் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் தீப்பிடித்துக்கொண்டது. ஈரானிய நிறுவனத்துக்குச் சொந்தமான அக்கப்பலின் 32 சிப்பந்திகளையும் காணவில்லை என்று சீனப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களில் 30 பேர் ஈரானியர்கள் என்றும் இருவர் பங்ளாதே‌ஷியர்கள் என்றும் அறியப்படுகிறது. விபத்தில் சிக்கிய சரக்குக் கப்பல் சேதமடைந்தபோதிலும் சீனாவைச் சேர்ந்த அதன் 21 சிப்பந்திகளும் காப்பாற்றப் பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.