டமாஸ்கஸ்: சிரியாவில் போராளி கள் வசம் உள்ள பகுதியில் அரசாங்கப் படையினர் மேற் கொண்ட விமானத் தாக்குதல் களில் ஒரே நாளில் பொதுமக்க ளில் 17 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அத்தாக்குதல்களில் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக வும் அந்த அமைப்பு குறிப்பிட் டுள்ளது. போராளிகளின் வசம் உள்ள இட்லிப் மற்றும் ஹமா பகுதிகளில் தற்போது கடும் சண்டை நடந்து வருகிறது. போராளிகளின் கோட்டையாகக் கருதப்படும் அப்பகுதிகளிலிருந்து அவர்களை விரட்டியடிப்பதற்காக ரஷ்ய விமானங்களின் உதவியுடன் சிரியா அதிபர் ஆசாத்தின் விமானப் படை குண்டுகளை வீசித் தாக்கி வருகிறது.
சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதியில் அரசாங்கப் படை மேற்கொண்டு வரும் விமானத் தாக்குதல்களில் பல கட்டடங்களும் மருத்துவமனைகளும் தரைமட்டமாகின. அந்த இடத்தில் மக்கள் கூடியுள்ளனர். படம்: ஏஎஃப்பி

