அடுத்த மாதம் தென்கொரியாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி களுக்கு தமது நாட்டு வீரர்களை அனுப்ப வடகொரியா முன்வந்துள் ளது. திடல்தட வீரர்கள், தேக் வாண்டோ குழு, கலை படைப் பாளர்கள் ஆகியோருடன் உயர் மட்ட அதிகாரிகளையும் அனுப்ப வடகொரியா விருப்பம் தெரி வித்துள்ளது கிட்டத்தட்ட ஈராண்டு களுக்குப் பிறகு இரு கொரிய அதிகாரிகளும் நேற்று சந்தித்துப் பேசிய வேளையில் வடகொரியா வின் முடிவு கூட்டத்தில் தெரி விக்கப்பட்டதாக தென்கொரிய அரசாங்க அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இம்முடிவு செயலுக்கு வந்தால் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்கால ஒலிம்பிக் போட்டி களில் வடகொரியா பங்கேற்கும். ஐநா தடைகளால் தனிமைப் படுத்தப்பட்ட வடகொரியா, தென் கொரியாவுடனான நேரடி ராணுவ தொலைபேசித் தொடர்பை மீண் டும் தொடங்குவதற்கான ஏற்பாடு களைச் செய்துள்ளது. ராணுவ தகவல் தொடர்புப் பரிமாற்றத் திற்கான தொழில்நுட்பப் பரா மரிப்புப் பணிகளை அது நிறைவு செய்திருப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார். நேரடி ராணுவ தொலை பேசியை மீண்டும் ஏற்படுத்துவது குறித்து வடகொரிய அதிகாரிகள் தங்களது அதிகாரிகளிடம் விருப் பம் தெரிவித்ததாக கொரிய ஒருங்கிணைப்புக்கான தென் கொரிய துணை அமைச்சர் சுன் ஹே சுங் தெரிவித்தார்.
தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சோ முயுங் குயுன் (இடது) வடகொரிய பேராளர் குழுத் தலைவர் ரி சோன் - குவோன் ஆகிய இருவரும் நேசக்கரம் நீட்டி பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். படம்: ஏஎஃப்பி

