அமெரிக்கத் தேர்தலில் ஓப்ரா போட்டியிடக்கூடும்

அமெரிக்கத் தேர்தலில் ஓப்ரா போட்டியிடக்கூடும்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் 2020ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப்பை எதிர்த்து தொலைக்காட்சி புகழ் ஓப்ரா வின்ஃபிரே போட்டியிடக் கூடும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் பதவிக்குப் போட்டி யிடுவது குறித்து ஓப்ரா எதுவும் கூறவில்லை என்ற போதிலும் கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை அடுத்து வரும் தேர்தலில் அவர் போட்டியிடக்கூடும் என்ற எண் ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர் னியா மாநிலத்தில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் ஆப்பிரிக்க, அமெரிக்க நடிகை ஓப்ரா வின்ஃபிரே தனது பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இன்று அமெரிக்க கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்கும் அவர், விருது விழாவில் பேசியபோது தனது இளமைக்கால சோகங்களையும் வறுமை நிலையையும் குறிப்பிட்டுப் பேசினார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்ற பெண்மணியாக விளங்கும் ஓப்ரா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பிரபல நடிகைகள் சிலர் கூறி யுள்ளனர்.