ஸி ஜின்பிங்- மெக்ரோன் சந்திப்பு, சீனாவுடன் பிரான்ஸ் வர்த்தக உடன்பாடு

ஸி ஜின்பிங்- மெக்ரோன் சந்திப்பு, சீனாவுடன் பிரான்ஸ் வர்த்தக உடன்பாடு

1 mins read
a7ec613a-1892-4896-a26c-7e9fb9c40a81
-

பெய்ஜிங்: சீனா சென்றுள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோன், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியுள் ளார். அதற்கு முன்னதாக பிரெஞ்சு அதிபருக்கு பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் ராணுவ மரியாதை அணிவகுப்பு டன் கூடிய சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஸி ஜின்பிங் ஏற்கெனவே திரு மெக் ரோனுக்கும் அவரது மனைவிக்கும் திங்கட்கிழமை இரவு விருந்து அளித்தார்.

இரு தரப்பு உறவு, வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவ்விரு தலைவர்களும் பேச்சு நடத்திய தாகக் கூற்பபட்டது. இந்த சந்திப்பின்போது சீனாவும் பிரான்சும் பல வர்த்தக உடன்பாடுகளில் கையெழுத் திட்டன. திரு மெக்ரோனுடன் வர்த்தகத் தலைவர்கள் 50 பேர் அடங்கிய குழுவினர் சீனா சென்றுள்ளனர். திரு மெக்ரோன் முன்னதாக தன் மனைவியுடன் பெய்ஜிங்கில் உள்ள ஃபார்பிடன் நகரை சுற்றிப் பார்த்தார். அந்நகரில் உள்ள சீன, பிரெஞ்சு பள்ளிக்கூடத்திற்கும் அவர்கள் சென்றிருந்தனர்.

சீனா சென்றுள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோனுக்கு பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் ராணுவ மரியாதை அணிவகுப்புடன் கூடிய சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்