அகமட் ஸாஹிட்: மகாதீர் பிரதமரானால் கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்கும்

அகமட் ஸாஹிட்: மகாதீர் பிரதமரானால் கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்கும்

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரை பிரதமர் வேட் பாளராக பக்காத்தான் ஹரப்பான் அறிவித்தது முதல் எதிர்க்கட்சி கூட்டணி எடுத்த அந்த முடிவை ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் மலேசிய துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அகமட் ஹாஹிட் ஹமிடி, "திரு மகாதீர் பிரமராக வந்தால் கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்கும்," என்று கூறியுள்ளார்.

அத்துடன் எதிர்க்கட்சிக் கூட்டணிக்குப் பொருத்தமான தலைவர்கள் இல்லை என்பதை அவர்களின் இந்த முடிவு காட்டுகிறது என்றும் திரு ஸாஹிட் கூறினார். இந்நிலையில் மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் லியோ தியோங் லாய், மகாதீரை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சி கூட்டணி அறிவித்திருப்பது எதிர்க்கட்சிக்கு எந்தவிதமான கொள்கையும் கிடையாது என் பதைக் காட்டுகிறது என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சி கூட்டணியில் அன்வாரின் கெஅடிலான் கட்சியைவிட திரு மகாதீரின் பிரிபூமி பெர்சத்து கட்சியே தற்போது மிகப் பெரிய கட்சியாக விளங்குகிறது என்று திரு லாய் குறிப்பிட்டார்.