கலிஃபோர்னியாவில் கனமழை, நிலச்சரிவு; 13 பேர் உயிரிழப்பு

கலிஃபோர்னியாவில் கனமழை, நிலச்சரிவு; 13 பேர் உயிரிழப்பு

1 mins read
8af3b007-3e0b-485f-b989-a9375bcca7ee
-

கடுமையான காட்டுத்தீயால் கடந்த மாதம் பாதிக்கப்பட்ட அமெ ரிக்காவின் தெற்கு கலிஃபோர் னியா மாநிலம் மீண்டும் ஒருமுறை இயற்கைச் சீற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை யில் இருந்து பெய்த கனமழையா லும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளிலும் சிக்கி கிட்டத் தட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். லாஸ் ஏஞ்சலிசுக்கு வடக்கே பசிபிக் கடலோரமாக அமைந்துள்ள சான்ட பார்பரா கவுன்டி பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கு இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறி வுறுத்தப்பட்டனர். ஆனால், 10% முதல் 15% மக்களே அந்தக் கட்டாய உத்தரவுக்கு இணங்கி, அங்கிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

நிலச்சரிவால் ஏராளமான மரங்கள் பெயர்ந்து விழுந்தன. வீடுகள் முழுவதும் சேற்றால் சூழப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இடுப்பு உயரத்திற்கு ஓடிய சேற்று நீரில் ஏராளமான கார்களும் அடித்துச் செல்லப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான பாறைகள் மேலிருந்து உருண்டு சாலைகளில் விழுந்தன. அந்தப் பகுதி 'முதலாம் உலகப் போரின் யுத்தகளம்போல காட்சி அளித்ததாக' செய்தியாளர்களிடம் கூறினார் சான்ட பார்பரா கவுன்டி தலைவர் பில் பிரௌன்.

இடிந்து விழுந்த வீட்டிற்குள் சிக்கியிருக்கும் ஒரு பெண்ணை மீட்கப் போராடும் அவசரகால உதவிப் படையினர். படம்: ராய்ட்டர்ஸ்