கோலாலம்பூர்: எதிர்க்கட்சி கூட்டணியான பக்கத்தான் ஹரப் பானின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முஹமது நேற்று அன்வார் இப்ராஹிமை சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்க சிறைத் துறை அதி காரிகள் மறுத்துவிட்டனர். ஓரினப் புணர்ச்சி குற்றச் சாட்டில் அன்வார் இப்ராஹிம் தற்போது ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத் துக்காக அவர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். வரும் ஜூன் 8ஆம் தேதி அன்வார் சிறையிலிருந்து விடுவிக்கப்படவிருக்கிறார்.
இந்நிலையில் அன்வாரைச் சந்திப்பதற்காக நேற்று மருத்துவ மனைக்கு மகாதீர் சென்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து செய்தியாளர் களிடம் பேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர், "ஜனநாயக நாட்டில் இருந்தாலும் நண்பரைச் சந்திக்க அனுமதியில்லை," என்றார். எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தாம் தேர்வுசெய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கவே அன்வாரைச் சந்திக்க விரும்பியதாகவும் அவர் கூறினார்.
"ஜனநாயக நாட்டில் நண்பரைக்கூட சந்திக்க அனுமதியில்லை" என்கிறார் டாக்டர் மகாதீர். படம்: ஏஎஃப்பி

