டெஹ்ரான்: ஈரானின் தெற்கில் அமைந்துள்ள கெர்மான் மாநிலத் தில் நேற்று 5.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியி யல் ஆய்வாளர்கள் கூறினர். ஈராக் எல்லையை ஒட்டிய ஈரான் பகுதியில் நிலநடுக்கம் ஏற் பட்டதாகக் கூறப்பட்டது. தலைநகர் டெஹ்ரானிலிருந்து 700 கி.மி. தொலைவில் குர்தியர்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சென்ற ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி மேற்கு ஈரானில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 10,000 பேர் காயம் அடைந்தனர்.
ஈரானை உலுக்கிய 5.6 ரிக்டர் நிலநடுக்கம்
1 mins read

