கலிஃபோர்னியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை உயர்வு, பலரை காணவில்லை

கலிஃபோர்னியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை உயர்வு, பலரை காணவில்லை

1 mins read
c0df4755-732f-46bb-a324-1d1e5aae2270
-

கலிஃபோர்னியா: அமெரிக் காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர். சென்ற மாதம் கடும் காட்டுத் தீயால் பெரிதும் பாதிக்கப்பட்ட கலிஃபோர்னியா மாநிலம் மீண்டும் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பரா கவுண்டி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மேலும் 28 பேர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக நாசமானதாகவும் மேலும் 300 வீடுகள் சேதம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரி விலும் மண் சரிவிலும் சிக்கிக் கொண்ட பலரை மீட்புக் குழு வினர் காப்பாற்றினர். மண் சரிவில் சிக்கி காயம் அடைந்த மீட்புக் குழுவினர் காப்பாற்றினர்.

கலிஃபோர்னி யாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச் சரிவில் 100க்கும் மேற்பட்ட பல வீடுகள் முற்றாக நாசமாகின. இன்னும் பல வீடுகள் சேதம் அடைந்தன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்