பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்

1 mins read
e8f88fb7-5098-43c8-b428-cea1372c5e03
-

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கசூர் நகரில் சிறு பிள்ளைகள் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டு வருவதை எதிர்த்து நடந்த கலவரத்தில் இருவர் உயிரி ழந்தனர். சில நாட்களுக்குமுன் காணாமல் போன எட்டு வயது சிறுமி சைனாப், செவ்வாய்க்கிழமை குப்பை கொட்டுமிடத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டாள். அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொல்லப் பட்டது தெரியவந்தது. இதனால் ஊர் மக்கள் கொதிப்படைந்தனர். கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை சம்பவங்களை ஒடுக்கப் போலிசார் அதிக முயற்சி எடுக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.

கடந்த ஈராண்டுகளில், இதே போன்ற 12 கொலைகள் நடந் திருப்பதாகக் கசூர் நகரக் காவல்துறையினர் தெரிவித்தனர். அவற்றுள் ஐந்து கொலைகளை ஒரே நபர் செய்ததாக நம்பப் படுகிறது. நூற்றுக்கணக்கான போலிஸ் அதிகாரிகள் அந்நபரை வலைவீசித் தேடி வருகின்றனர். இதுவரை 90 சந்தேக நபர்களுக்கு மரபணுச் சோதனை செய்யப் பட்டுள்ளது. சைனாப்பின் சடலம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு, மக்கள் கூட்டமாகத் திரண்டு கசூரில் உள்ள போலிஸ் தலைமையகத் திற்குள் நுழைய முயன்றனர். அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். சைனாப்பின் கொலையால் பாகிஸ்தான் முழுவதும் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் சிறு பிள்ளைகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவதை எதிர்த்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. படம்: ஏஎஃப்பி