கலிஃபோர்னியா நிலச்சரிவில் சிக்கியவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு

கலிஃபோர்னியா நிலச்சரிவில் சிக்கியவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு

1 mins read
26bb0eb9-5941-47ff-a7d5-d9e240c73489
-

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரி வில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமற்போனவர் களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இருப் பினும் நிலச்சரிவில் சிக்கிய வர்கள் இன்னும் உயிருடன் இருப் பார்கள் என்ற நம்பிக்கை மீட்புக் குழுவினருக்கு குறைந்து வருவ தாகக் கூறப்படுகிறது. இருப்பினும் 1,200 பேர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்கு உதவ ராணுவ வாகனங்களும் ஆளில்லா விமானங்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. இரண்டு வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட ஐவரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறிய போதிலும் காணாமற்போனவர்கள் எத்தனை பேர் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை.

கலிஃபோர்னியா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவின்போது வேரோடு சாய்ந்த மரங்கள், உருண்டு விழுந்த பாறைக் கற்கள் இவற்றுக்கு இடையில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். படம்: ஏஎஃப்பி