டுனிசியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம்; ராணுவ வீரர்கள் குவிப்பு

டுனிசியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம்; ராணுவ வீரர்கள் குவிப்பு

1 mins read

டுனிஸ்: டுனிசியாவில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் குறிப்பிட்ட சில இடங்களில் ராணுவ வீரர்களும் போலிசாரும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. விலைவாசி அதிகரிப்பு, வரி உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து டுனிசியாவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

அமைதியான முறையில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் நாளடைவில் வன்முறை ஆர்ப்பாட்டங்களாக மாறின. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயன்ற போலிசார் மீது அவர்கள் கற்களை வீசித் தாக்கினர். போலிஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலிஸ்காரர்கள் உட்பட பலர் காயம் அடைந்தனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 300 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.