பேங்காக்: தாய்லாந்தின் மேற்குக் கடற்கரைத் தீவு நோக்கிச் சென்ற விரைவு சுற்றுலாப் படகு ஒன்று நேற்று நடுக்கடலில் திடீரென்று தீப்பிடித்து வெடித்தது. அதில் ஒருவர் மாண்டார். 'த கிங் போசெய்டன்' என் னும் அந்தப் படகில் 31 பேர் பய ணம் செய்துகொண்டு இருந் தனர். அவர்களில் 27 பேர் சீன நாட்டு சுற்றுப் பயணிகள் என்றும் அவர்களில் மூவர் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டது. வைகிங் கேவ் அருகே படகு சென்றுகொண்டு இருந்தபோது எரிபொருள் கசிந்ததன் காரணமாக தீப்பற்றியதாக நம்பப்படுகிறது.
தீ மளமளவென்று படகு முழு வதும் பரவியதைத் தொடர்ந்து வெடிப்பு நிகழ்ந்ததாக நம்பப்படு கிறது. அந்த வெடிப்பில் சிக்கி படகு ஊழியர்களில் ஒருவர் மாண்டதாகவும் ஐந்து சீன நாட் டவர்கள் காயமுற்றதாகவும் 'சின்ஹுவா' செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதர சுற்றுப்பயணிகள் அனைவரும் பத்திரமாகக் கரை சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்த சீன தூதரக அதிகாரி ஒருவர், மீட்புக்குழுவினர் மேலும் சிலரைத் தேடி வருவதாகக் கூறினார். ஃபி-ஃபி தீவில் உள்ள சுண்ணாம்புப் பாறை குகைக்கு சுற்றுப்பயணிகள் அதிகளவில் செல்வது வழக்கம்.
எரிபொருள் கசிவு காரணமாக படகில் தீப்பிடித்ததாக நம்பப்படு கிறது. படம்: ஃபேஸ்புக்

