தவறான எச்சரிக்கை பரவியது குறித்து அமெரிக்கா விசாரணை

தவறான எச்சரிக்கை பரவியது குறித்து அமெரிக்கா விசாரணை

2 mins read
1dcc3a12-63ea-40c2-8634-35551f64575c
-

வா‌ஷிங்டன்: ஏவுகணை அபாயம் தொடர்பாக கைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு குறுஞ்செய்தி யால் அமெரிக்காவின் ஹவாயி மாநிலத்தில் பெரும் பீதி கிளம் பியது. அதனைத் தொடர்ந்து அது தவறான செய்தி என்று ஹவாயி மாநில அரசாங்கம் அவசரமாகத் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அவசர அறிவிப்பு முறையில் பெரிய மாற்றம் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிகாரிகள் மட்டத் தில் குரல் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, நடந்தது என்ன என்று முழுமையாக விசாரித்து அறியப்படும் என்று அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணை யம் தெரிவித்துள்ளது.

ஹவாயி அவசரநிலை நிர்வாக முகவையிலிருந்து உள்ளூர் நேரப் படி சனிக்கிழமை காலை ஏராள மான கைபேசிகளுக்கு ஒரு குறுந் தகவல் பறந்தது. "ஹவாயியை நோக்கி ஏவு கணை அச்சுறுத்தல் வந்து கொண்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பான இடத்துக்குச் செல் லுங்கள். இது ஒத்திகை அல்ல," என்பதுதான் அந்தத் தகவல். அதனைக் கண்டதும் ஹவாயி மக்கள் பதற்றமடைந்தனர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தவிப்பில் அவர்கள் உறைந் தனர்.

இந்தத் தகவல் தொலைக் காட்சி யிலும் வானொலியிலும்கூட வெளி யிடப்பட்டது. மேலும், இது தொடர் பான எச்சரிக்கை ஒலியும் எழுப்பப் பட்டது. அதனால் அந்த அபாய செய்தி உண்மை என்றே பலரும் நம்பினர். அது ஒரு தவறான தகவல் என்று 18 நிமிடங்கள் கழித்து ஹவாயி அரசாங்கம் அறிவித்த பின்னர்தான் பதற்றம் ஓரளவு தணிந்தது.

ஏவுகணை அச்சுறுத்தல் நெருங்குவதாக ஹவாயி கைபேசிகளுக்குச் சென்ற தவறான குறுந்தகவல். படம்: டுவிட்டர்