அங்காரா: துருக்கி விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம் ஒன்று ஓடுபாதையிலி ருந்து விலகி செங்குத் தான பாறைப் பகுதியில் சறுக்கி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த விமானத்தில் சென்ற 168 பேரும் உயிர் தப்பியதாக அதிகாரிகள் கூறினர். அந்த விமானத்தில் 162 பயணிகளும் 2 விமானிகளும் 4 விமான சிப்பந்திகளும் சென்றனர். அங்காரா நகரிலிருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்ட போயிங் 737- 800 ரக விமானம் துருக்கியின் கருங்கட லோரப் பகுதியில் அமைந் துள்ள டிராப்ஸே„ன் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது விபத்துக்கு உள்ளானது. ஓடுபாதையிலிருந்து விலகி பாறை உச்சியி லிருந்து சறுக்கி விழுந்த விமானம் உறைந்த சகதியில் சிக்கிக் கொண் டது.
துருக்கி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஒரு விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி செங்குத்தான பாறை உச்சியிலிருந்து சறுக்கி விழுந்தது. கடலுக்கு சில மீட்டர் தொலைவில் சகதியில் அந்த விமானம் சிக்கிக்கொண்டதை புகைப்படங்கள் காட்டின. படம்: ஏஎஃப்பி

