தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்ணெய்க் கப்பல் கடலில் மூழ்கியது

1 mins read
ec06508d-1d22-4cc8-94c9-f483cf169727
-

பெய்ஜிங்: சீனக் கடல் பகுதியில் கடந்த ஒரு வாரமாக எரிந்து கொண்டிருந்த எண்ணெய்க் கப்பல் நேற்று கடலில் மூழ்கியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. பனாமாவில் பதிவு செய்யப் பட்ட சாஞ்சி எனும் ஈரானிய எண்ணெய்க் கப்பல் ஒரு வாரத் திற்கு முன்பு கிழக்கு சீனக் கடல் பகுதியில் சரக்கு கப்பலுடன் மோதியதைத் தொடர்ந்து அந்த எண்ணெய்க் கப்பல் தீப்பற்றிக் கொண்டது.

ஒரு மில்லியன் பீப்பாய் அளவு பெட்ரோலிய எண்ணெய் ஏற்றப்பட்டிருந்த அந்த எண்ணெய்க் கப்பல் ஈரானிலிருந்து தென்கொரியாவுக்கு புறப்பட்டுச் சென்றபோது இம் மாதம் 7ஆம் தேதி சீனக் கடல் பகுதியில் ஹாங்காங் சரக்கு கப்பலுடன் மோதியது. ஹாங்காங் சரக்கு கப்பலில் சென்ற 21 பேரும் காப்பாற்றப் பட்டனர். ஆனால் அந்த எண்ணெய்க் கப்பலில் சென்ற 30 ஈரானியர்களையும் பங்ளாதேஷ் நாட்டவர்கள் இருவரையும் இன் னும் காணவில்லை.

சீனாவின் கடல் பகுதியில் சரக்குக் கப்பலுடன் மோதிய ஈரானிய எண்ணெய்க் கப்பல் கடந்த ஒரு வாரமாக தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அக்கப்பல் நேற்று கடலில் மூழ்கியது. படம்: ஏஎஃப்பி