இந்தோனீசியப் பங்குச் சந்தை கட்டடத்துக்குள் இரு கட்டடங் களை இணைக்கும் நடைபாதை இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த அசம்பாவிதம் நேற்று பிற்பகல் நிகழ்ந்ததும் கட்டடத் துக்குள் இருந்தோர் வெளி யேற்றப்பட்டனர். நடைபாதை இடிந்து விழுந்த தற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அது குறித்து விசாரணை நடத்தப் படுகிறது. இதற்கிடையே, நடந்தது வெடிகுண்டு தாக்குதல் அல்ல என்று இந்தோனீசிய போலிசார் தெளிவுபடுத்தியுள்ளனர். ஏறத்தாழ 72 பேர் காயமடைந்த தாகவும் அவர்கள் அனைவரும் நான்கு வெவ்வேறு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலிசார் தெரிவித்தனர். நடை பாதை இடிந்து விழுந்ததில் யாரும் மரணமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்தவர்களுக்கு இந்தோனீசியப் பங்குச் சந்தைக்கு வெளியே முதலுதவி வழங்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

