பெரிஸ்: கலிஃபோர்னியாவில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட் டிருந்த 13 பிள்ளைகளை அமெரிக்கப் போலிசார் மீட்டதைத் தொடர்ந்து அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள் ளனர். பிள்ளைகளை வீட்டில் அடைத்துவைத்து கொடுமைப் படுத்தியதான குற்றச்சாட்டுகளின் பேரில் 57 வயது அலன் டர்பின் என்பவரையும் அவர் மனைவி 49 வயது லூயிஸ் அனா டர்பினையும் போலிசார் கைது செய்துள்ளனர். பிள்ளைகளை அடைத்து வைத்து சித்திரவதைப்படுத்தி யதற்கான காரணத்தை அந்தத் தம்பதியர் போலிசாரிடம் தெரி விக்கவில்லை.
இரண்டு வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட அந்த 13 பிள்ளைகளும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரிஸ் நகரில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் உடன் பிறப்புகள் என்று நம்பப்படுகிறது. வீட்டினுள் அடைத்து வைக்கப் பட்டிருந்த பிள்ளைகளில் சிலர், இரும்புச் சங்கிலியால் படுக்கை யோடு சேர்த்துக்கட்டப்பட்டு பூட்டுப் போடப்பட்டிருந்ததாக போலிசார் கூறினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த வீட்டி லிருந்து எப்படியோ தப்பிவந்த 17 வயது பெண், அந்த வீட்டில் கண்டெடுத்த ஒரு கைத்தொலை பேசியைப் பயன்படுத்தி அவசர எண் மூலம் போலிசாருடன் தொடர்புகொண்டு தனது சகோதர, சகோதிரகள் 12 பேரை தன் பெற்றோர் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
ஒரு வீட்டினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 13 பிள்ளைகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் பெற்றோரான 57 வயது அலன் டர்பின் என்பவரையும் அவர் மனைவி 49 வயது லூயிஸ் அனா டர்பினையும் போலிசார் கைது செய்தனர். படம்: ஏஎஃப்பி

