மியன்மார் காவல்துறையினர் சுட்டதில் 7 பேர் பலி

மியன்மார் காவல்துறையினர் சுட்டதில் 7 பேர் பலி

1 mins read

யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் பௌத்த சமயத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் சுமார் 4,000 பேர் ஒரு விழாவுக்காக அங்குள்ள ஒரு கோயில் வளாகத் தில் திரண்டனர். அந்த விழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கூடியதாக அதிகாரி ஒருவர் கூறினார். ஆர்ப்பாட்டக்காரர்கள், அர சாங்க அலுவலகத்தைச் சுற்றி வளைத்தபோது கூட்டத்தினரைக் கலைக்க காவல்துறையினர் ரப்பர் தோட் டாக்களை பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.

காவல்துறையினர் மீது ஆர்ப் பாட்டக்காரர்கள் கற்களை வீசத் தொடங்கியதும் அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். போலிஸ் தரப்பில் பலர் காயம் அடைந்த தாகவும் கூறப்பட்டது. பங்ளா தேஷில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளை மியன் மாருக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பில் அவ்விரு நாடுகளும் இணக்கம் கண்ட அதே நாளன்று ராக்கைன் மாநிலத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.