இந்தோனீசிய அமைச்சரவை மாற்றம்

இந்தோனீசிய அமைச்சரவை மாற்றம்

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, அமைச் சரவையில் சில மாற்றங்களைச் செய்துள்ளார். கோல்கார் கட்சியின் மேலும் ஒரு மூத்த உறுப்பினருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப் பட்டுள்ளது. சமூக விவகாரங்களுக்கான அமைச்சர் கோஃபிஃபா இன்டர் பரவான்சாவுக்குப் பதிலாக கோல்கார் கட்சியின் தலைமைச் செயலாளர் இட்ருஸ் மார்ஹம் அந்தப் பொறுப்பை ஏற்கிறார். அதிபர் அலுவலக உயர் அதிகாரி டிடென் மஸ்டுகிக்குப் பதிலாக இந்தோனீசிய முன்னாள் ஆயுதப் படைத் தலைவர் மோயில் டோகோவுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஜோக்கோ விடோடோவின் தேர்தல் பிரசாரக் குழுவில் முக்கிய பங்காற்றிய 54 வயதான டிடென் ஓய்வு எடுத்துக் கொள்வதாகவும் 52 வயதாகும் கோஃபிஃபியா, ஜூன் மாதம் கிழக்கு ஜாவாவில் உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகியுள்ளார்.