2013க்குப் பின் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்திய தாய்லாந்து

2013க்குப் பின் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்திய தாய்லாந்து

1 mins read

பேங்காக்: ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக குறைந்தபட்ச ஊதியத் தொகையை நாடு முழுவதிலும் உயர்த்த உள்ளதாக தாய்லாந்து கூறியுள்ளது. நீடித்துவரும் வருமான ஏற்றத்தாழ்வை சமாளிக்க அந்நாட்டின் ராணுவ அரசாங்கம் முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதம் முதல், இடத்திற்கு தகுந்தவாறு ஒரு நாளுக்கு 308 பாட் முதல் 330 பாட் வரை இருக்கும் குறைந்தபட்ச ஊதியம் 5 பாட் (20 காசு) முதல் 22 பாட் வரை உயர்த்தப்படும் என்று மனிதவளத்திற்கான நிரந்தர செயலாளர் ஜரின் சக்கஃபார்க் நேற்று முன்தினம் கூறியுள்ளார். பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ஊதியம் உயரவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.