சோல்: வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையே சுமார் 70 ஆண்டுகளாக நீடித்து வந்த பதற்ற நிலை அடுத்த மாதம் 9ஆம் தேதி தென்கொரியாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளால் முன்னேற் றம் காணும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இரு கொரிய நாடுகளும் ஒரே கொடியை ஏந்தி ஒலிம்பிக் போட்டி களின் தொடக்க விழாவில் அணிவகுத்து வருவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கிடையே, தொடக்க விழா வின் முன்தினமான பிப்ரவரி 8ஆம் தேதி பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பிற்கு வடகொரியா ஏற்பாடு செய்து வருகிறது. வடகொரிய தலைநகர் பியோங் யாங் அருகே ஆகாயப்படைத் தளத்தில் 12,000 ராணுவ வீரர்கள் பங்கேற்கும் மாபெரும் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. ஆயுதங்கள் பலவற்றை கொண்டு தனது பலத்தை விளம் பரப்படுத்தவுள்ள வடகொரியா, தனது ராணுவப் படையின் 70ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடு வதற்காக அந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறிவருகிறது.
வடகொரியாவில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு
1 mins read

