பாசிர் குடாங்: மலேசியாவில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் அடுத்த மாதம் மற்றுமொரு பயிற்சியை மலேசிய போலிஸ் படை நடத்த விருக்கிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தவேண்டிய பட்சத்தில் இன்னும் சில மாதங்க ளில் பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுத் தேர்த லின்போது 64,000க்கும் மேற்பட்ட போலிஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள் என்று போலிஸ் படையின் உள்துறை பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குநர் ஸுல்கிஃப்லி அப்துல்லா தெரி வித்துள்ளார். தேர்தலின்போது எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் நாடு முழுவதும் அதி காரிகள் நிறுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக மலே சிய ஊடகம் தெரிவித்துள்ளது.
பேருந்து எரிந்து 52 பேர் பலி
1 mins read

