புக்கோம் தீவு எரிபொருள் திருட்டு: மூவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

புக்கோம் தீவு எரிபொருள் திருட்டு: மூவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

1 mins read

புக்கோம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் எரிபொருள் திருடிய சம்பவத்தின் தொடர்பில் கடந்த சனிக்கிழமை குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் நேற்று மேலும் தலா ஒரு புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. எலன் டான் செங் சுவான், 45, இங் ஹோக் டெக், 54, இருவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் $252,558 மதிப்புள்ள 764.81 டன் எரிபொருளை புக்கோக் தீவு துறை முக தளமேடையிலிருந்து பெற்றுக்கொண்டார்கள் என்று புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர்கள் அந்த எரி பொருளை புக்கோம் தீவிலிருந்து சிங்கப்பூரில் பதிவு செய் யப்பட்ட 'சென்டெக் 26' எனும் கப்பலில் ஏற்றினர். அந்தக் கப்பலின் தலைவரான 46 வயது டிவான் சுவான்

தான் எனும் வியட்னாமியர், கோ சூன் வெய் எனும் 35 வயது நபருடன் சேர்ந்து $845,824 மதிப்புள்ள 1,133 டன் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள திட்டம் வகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் திருடப்பட்ட அந்த எரிபொருளை புக் கோம் தீவில் பனாமாவில் பதிவு செய்யப்பட்ட 'எம்டி கியா' எனும் கப்பலில் ஏற்றியதாகக் கூறப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட மூவரையும் வழக்கறிஞர்கள் பிரதிநிதிக்கிறார்கள். அவர்கள் மூவரையும் மேலும் ஒரு வாரம் விசாரணைக் காவலில் வைக்க அரசுத் தரப்பு விடுத்த மனுவை நிதிபதி ஏற்றுக்கொண்டார். இம்மாதம் 25ஆம் தேதி அவர் கள் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.