சிங்கப்பூர் விமானக் காட்சியில் 'கொரிய கறுப்புக் கழுகுகள்' சாகசம்

சிங்கப்பூர் விமானக் காட்சியில் 'கொரிய கறுப்புக் கழுகுகள்' சாகசம்

1 mins read

சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சிங்கப்பூர் விமானக் காட்சியில் ஆசியாவின் மிகவும் புகழ்பெற்ற 'கொரிய கறுப்புக் கழுகுகள்' (Korean Black Eagles) போர் விமானங்களின் சாகசங்கள் (படம்) மூன்றாம் முறையாக இடம்பெறவுள்ளன. கொரியக் குழுவுடன் இந்தோனீசியாவின் 'ஜூப்பிட்டர்' விமானச் சாகசக் குழுவும் விமானக் காட்சியில் பங்கேற் கிறது. இதற்கு முன் அது கடைசியாக இந்த விமானக் காட்சியில் 2014ஆம் ஆண்டில் கலந்துகொண்டது. இவ்வாண்டு விமானக் காட்சிக்கு வரும் பார்வையாளர் களுக்கு விமான சாகசக் காட்சியைக் காண குறைவான நேரமே கிடைக்கும். வழக்கமாக இரு முறை இடம்பெறும் 40 நிமிட சாகசக் காட்சி இப்போது இரு 30 நிமிடக் காட்சிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. விமான சாகசக் காட்சியின்போது ஆகாயவெளி மூடப்படுவதால் விமானப் போக்குவரத்துக்கு அது பாதகமாக அமைகிறது என்ற காரணத்தால் சாகசக் காட்சியின் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது என்று அறியப்படுகிறது.