கடற்கரையில் புகுந்த கார்; குழந்தை பலி, பலர் காயம்

1 mins read
2c2cbc48-f538-4043-bb4b-aa0090f96b99
-

ரியோ டி ஜெனிரோவின் கோப்பக பானா கடற்கரையில் ஓய்வாக மாலை நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்த கூட்டத்தாரிடையே கார் ஒன்று புகுந்ததில் எட்டு மாதக் குழந்தை ஒன்று பலியானது. மேலும், 15 பேருக்குக் காயம் ஏற்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். காயமடைந்த பாத சாரிகள் மணல்மீது விழுந்து கிடந்தது அண்மைக்காலங்களில் நிகழ்ந்த தீவிரவாதச் சம்பவங் களை நினைவூட்டுவதாக இருந் தாலும் இந்தச் சம்பவம் வேண்டு மென்றே செய்யப்பட்டதல்ல என்று கூறப்பட்டது. விபத்தில் தொடர் புடைய காரின் ஓட்டுநர் அவ்விடத் தில் இருந்து வெளியேறிவிட்டா லும் பின்னர் பிடிபட்டதாக ஜி1 செய்தி இணையப்பக்கம் தெரிவித் தது. ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட் டதாகக் கூறிய போலிசார் காரில் வலிப்பு நோய்க்காக உட்கொள் ளும் மருந்து கண்டுபிடிக்கப் பட்டதாகக் குறிப்பிட்டனர். ஓட்டு நருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்ததா என்பது இன் னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கோப்பகபானா கடற்கரையில் விபத்தை ஏற்படுத்திய காரின் முன்புறக் கண்ணாடி நொறுங்கி இருந்ததோடு கூரையும் நெளிந்திருந்தது. கார் வேகமாகச் சென்று கூட்டத்தார் மீதும் அங்கிருந்த மேசை, நாற்காலிகள் மீதும் மோதியதாகச் சொல்லப்பட்டது. விரைந்து சென்ற கார், சைக்கிள் பாதையைக் கடந்து கூட்டத்தாரிடையே புகுந்து கடற்கரை மணலில் நின்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர். படம்: ராய்ட்டர்ஸ்