அவசரமாகத் தரையிறங்கிய மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்

அவசரமாகத் தரையிறங்கிய மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்

1 mins read

ஆஸ்திரேலியாவின் அலிஸ் ஸ்பிரிங் நகரில் உள்ள விமானத் தளத்தில் அவசரமாகத் தரை இறங்கிய மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளைக் கோலாலம்பூருக்கு அழைத்து வர விமானம் ஒன்றை அனுப்புவதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கேப்டன் இஷாம் இஸ்மாயில், இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியதுடன் அலிஸ் ஸ்பிரிங்கில் சிக்கித் தவிக்கும் பயணிகளை கோலாலம்பூரிலிருந்து அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடு களை நிறுவனம் சிரமேற்கொண்டு உள்ளதாகக் கூறினார். பாதிக்கப்பட்ட பயணிகளிடம் அவர் மன்னிப்புக் கோரினார்.

சிட்னியிலிருந்து கோலாலம் பூருக்கு 224 பயணிகளுடன் பயணம் செய்துகொண்டிருந்த MH122 விமானம் நேற்று முன்தினம் அலிஸ் ஸ்பிரிங்கில் அவசரமாகத் தரையிறங்கியது. சம்பவத்தில் எவருக்கும் காயம் இல்லை என்று தெரிவிக்கப் பட்டது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு, போக்கு வரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப் பட்டது. அவர்கள் MH148 விமானத் தின் மூலம் கோலாலம்பூருக்கு அழைத்து வரப்படுவர் என்று கூறப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 9.50 மணிக்கு விமானம் கோலாலம்பூர் வந்தடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டு இருந்தது.